பிரபல நடிகை அணிந்திருந்த உள்ளாடை எத்தனை கோடி தெரியுமா? மலைக்க வைக்கும் விலை!
அமெரிக்க நடிகை கைலி ஜென்னர் பேஷன் ஷோ ஒன்றில் அணிந்த 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள வைரங்களால் ஆன உள்ளாடை குறித்த விபரம்.
பிரபல அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகையும் அழகுசாதனப் பொருட்கள் தொழில்முனைவோருமான கைலி ஜென்னர், பேஷன் ஷோ ஒன்றில் அணிந்து வந்த பிரத்யேக உள்ளாடை உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.475 கோடி) மதிப்புடைய இந்த ஆடை, உலகிலேயே அதிக விலை மதிப்புமிக்க உள்ளாடையாகப் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இதற்கு முன்பு 3.5 கோடி டாலர் மதிப்பிலான ஆடையே அதிக விலை கொண்டதாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடம்பர ஆடையில் 4,410 வைரங்களும், 18 கேரட் தங்கமும் பயன்படுத்தப்பட்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மையப்பகுதியில் 75.54 கேரட் எடையுள்ள உயர்தர மஞ்சள் நிற வைரம் பதிக்கப்பட்டுள்ளது.
15 கைவினைக் கலைஞர்கள் இணைந்து சுமார் 1,000 மணி நேரம் உழைத்து இந்த ஆடையை உருவாக்கியுள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை உள்ளடக்கிய இந்த ஆடை, இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துப் பேசுபொருளாகியுள்ளது.