மீண்டும் பொருட்களுக்காக வரியை உயர்த்திய அமெரிக்கா அதிபர் டிரம்ப் அதிரடி

Published on: 27 Jan 2026, 04:01 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

தற்போது South Korea-வில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் பொருட்களுக்காக வரியை உயர்த்திய அமெரிக்கா அதிபர் டிரம்ப் அதிரடி

Donald Trump தலைமையிலான United States அரசு, பல்வேறு நாடுகளின் மீது பரஸ்பர வரிகளை விதித்து வரும் நிலையில், சமீபத்தில் தென் கொரிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னர், இந்தியா தங்களின் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டிய டிரம்ப், கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அறிவித்தார். பின்னர், ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய பொருட்களின் இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.

இதன் தொடர்ச்சியாக, தற்போது South Korea-வில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வர்த்தக ஒப்பந்தத்தை இறுதிப்படுத்துவதில் தென் கொரியா தாமதம் செய்து வருவதே இந்த நடவடிக்கைக்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வரி உயர்வு குறித்து இதுவரை முறையான அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தென் கொரியா தெரிவித்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW