கனடாவின் டொராண்டோவில் அபராதங்கள் அதிகரிப்பு - எதற்கு தெரியுமா?

Published on: 15 Nov 2025, 07:49 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கனடாவின் டொராண்டோவில் பனிப்பொழிவு ஏற்படும் காலங்களிலான வழித்தடங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துவோருக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கனடாவின் டொராண்டோவில் அபராதங்கள் அதிகரிப்பு - எதற்கு தெரியுமா?

கனடாவின் டொராண்டோவில் பனிப்பொழிவு ஏற்படும் காலங்களிலான வழித்தடங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துவோருக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
வீதிகளை மறைத்து வாகனங்களை நிறுத்தும் ஓட்டுநர்களுக்கான அபராதம் 200 டொலர்களிலிருந்து 500 டொலராக அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  டொராண்டோ மாநகரசபை இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. 

 பனிக்கால வழித்தடங்களில் வீதிகளை மறைத்து வாகனங்களை நிறுத்தும் ஓட்டுநர்களுக்கான அபராதம் நகரசபையினால் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது நகரத்தின் பனிக்கால பராமரிப்பு திட்டத்தை மேம்படுத்தும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாகும் எனவும் நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.  கடந்த பெப்ரவரி மாதம் பதிவான பாரியளவு பனிப்பொழிவைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 டொராண்டோவில் பனிப் பராமரிப்பு திறனை மேம்படுத்தும் இந்த முடிவு, வரவிருக்கும் குளிர்காலத்தில் போக்குவரத்து சிக்கல்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கடந்த குளிர்காலத்தில் பனிப்பொழிவு அகற்றும் நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW