கனடாவில் இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் பலி

Published on: 15 Nov 2025, 07:52 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் பலி

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து சம்பவம் கடந்த புதன்கிழமை  டொராண்டோவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 34 வயதான சிந்துஜா ஜீவராஜ் என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 47 வயதான ஜீவராஜ் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மீட்பு குழுவினர் அங்கு சென்றனர்.

எனினும் படுகாயம் அடைந்த பெண் உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஆண் மீட்கப்பட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்தா அல்லது தற்செயலானதா என டொராண்டோ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW