இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்

Published on: 08 Sep 2026, 02:06 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

இலங்கையில் தங்கத்தின் விலை பவுணுக்கு 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.  

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று 376,000 ரூபாயாகக் காணப்பட்ட 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை, இன்றைய நிலவரப்படி 377,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதேநேரம் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 347,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.  இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW