சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் நகைகள், வாகனங்கள் பறிமுதல்: பிரித்தானியாவின் புதிய அதிரடி திட்டம்

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோரின் வாழ்வாதார செலவுகளை குறைப்பதற்காக, அவர்களிடம் உள்ள நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்ய பிரித்தானிய உள்துறை அமைச்சகம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் நகைகள், வாகனங்கள் பறிமுதல்: பிரித்தானியாவின் புதிய அதிரடி திட்டம்

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோரின் வாழ்வாதார செலவுகளை குறைப்பதற்காக, அவர்களிடம் உள்ள நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்ய பிரித்தானிய உள்துறை அமைச்சகம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. திருமண மோதிரங்கள் மட்டும் விதிவிலக்காக வைக்கப்படும் நிலையில், பிற தங்க நகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் விலையுயர்ந்த சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படலாம்.

2019 முதல் சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்காக செலவிடப்பட்ட தொகை சுமார் 15 பில்லியன் டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் மிகப்பெரிய பளு ஏற்பட்டுள்ள நிலையில், சில புகலிடக்கோரிக்கையாளர்கள் கார்கள் போன்ற உயர்ந்த மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டிருப்பது அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனால், புலம்பெயர்ந்தோருக்கான ஹொட்டல், உணவு உள்ளிட்ட செலவுகளை பொதுவுடமையிலிருந்துத் தீர்க்காமல், அவர்களுடைய சொத்துகளையே அரசின் செலவுகளுக்கு பயன்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட இருக்கிறது. இதில் வாகனங்கள், நெக்லஸ்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை சேரும்.

மேலும், சட்டப்படி வந்துள்ள மற்றும் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களின் கார்கள் கூட பறிமுதல் செய்யப்படலாம். அதேபோல், சட்டவிரோதமாக நுழைந்து உணவு டெலிவரி போன்ற வேலைகளில் ஈடுபடும் புலம்பெயர்ந்தோரின் மின்சார பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றை விற்று அவர்களுக்கான தங்கும் செலவுகள் அரசால் ஈடு செய்யப்படும்.

மொத்தத்தில், சட்டவிரோத புலம்பெயர்வைத் தடுக்கவும், “ஏன் பிரித்தானியாவுக்கு வந்தோம்?” என்று எண்ணும் நிலையை உருவாக்கவும் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்தத் திட்டம் காட்டுகிறது.