2026 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை நூலிழையில் இழந்த கேரளா இளம்பெண்

2026 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ வென்ற நிலையில், இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட கேரளாவைச் சேர்ந்த கசியா லிஸ் மெஜோ நூலிழையில் வாய்ப்பை இழந்தார்.


2026 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை நூலிழையில் இழந்த கேரளா இளம்பெண்

2026 ஆம் ஆண்டுக்கான 'மிஸ் யுனிவர்ஸ்' (பிரபஞ்ச அழகி) பட்டத்தை புவேர்ட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ வென்றுள்ளார். உலக முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி, புவேர்ட்டோ ரிக்கோ நாட்டின் தலைநகரான சான் யுவான் நகரில் கோலாகலமாகநிறைவு பெற்றது.

1952 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் இந்தப் போட்டியின் 75ஆவது பதிப்பில், உலகம் முழுவதிலுமிருந்து 116 அழகிகள் கலந்துகொண்டனர். கடும் போட்டிகளுக்கு மத்தியில் போட்டியை நடத்திய புவேர்ட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ பிரபஞ்ச அழகி பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு 3,150 வைரங்கள் பதிக்கப்பட்ட வெள்ளை தங்க கிரீடம் சூட்டப்பட்டது.

இப்போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கேரளாவைச் சேர்ந்த 19 வயது நிரம்பிய பெங்களூரு சட்டக்கல்லூரி மாணவி காசியா லிஸ் மெஜோ கலந்துகொண்டார். 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026' பட்டத்தை வென்று இறுதிப் போட்டி வரை முன்னேறிய அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், துரதிர்ஷ்டவசமாக அவர் 'டாப் 12' போட்டியாளர்கள் பட்டியலுக்குள் நுழைய முடியாமல் வெளியேறினார்.

கேரளாவின் மாவேலிக்கரையைப் பூர்வீமாகக் கொண்ட காசியா லிஸ் மெஜோ, அபுதாபியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவர். மாடலிங் துறையில் ஈடுபாடு கொண்ட இவர், பாடல்கள் பாடுவது, வயலின் மற்றும் டிரம்ஸ் வாசிப்பதிலும் திறமை படைத்தவர். அத்துடன் 'ஷைலாக்' என்ற மலையாளத் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு இந்தியா சார்பில் 1994 இல் சுஷ்மிதா சென், 2000 இல் லாரா தத்தா மற்றும் 2021 இல் ஹர்னாஸ் சந்து ஆகியோர் பிரபஞ்ச அழகி பட்டங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க