குடியேற்ற அமைப்புகள் கனடா எல்லைப் பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு

Published on: 26 Nov 2025, 05:14 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கனடா மத்திய அரசின் புதிய எல்லைப் பாதுகாப்பு மசோதா C-12க்கு எதிராக பல குடியேற்ற உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

குடியேற்ற அமைப்புகள் கனடா எல்லைப் பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு

கனடா மத்திய அரசின் புதிய எல்லைப் பாதுகாப்பு மசோதா C-12க்கு எதிராக பல குடியேற்ற உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன. இந்த மசோதா குடியேற்றக்காரர்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குடியேறிகள் உரிமைகள் வலையமைப்பு மற்றும் கனடிய அகதிகள் பேரவை உள்ளிட்ட அமைப்புகள், மசோதாவை உடனடியாக வாபஸ் பெறுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. மசோதா குறித்து ஆலோசிக்கப்படும் குழுவில் தங்களை சாட்சிகளாக சேர்க்காததையும் அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

70 பக்கங்கள் கொண்ட இந்த சட்ட முன்மொழிவு ஒன்பது தற்போதைய சட்டங்களில் திருத்தங்களை உள்ளடக்கியதாகவும், அதை வெறும் மூன்று வாரங்களில் முழுமையாக ஆய்வு செய்வது சாத்தியமல்ல என்றும் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால், அவர்கள் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW