ட்ரம்ப் குறித்து தவறான வார்த்தை பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்ட கனடா பிரதமர் கார்னி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்து பேசியபோது தாம் தவறான சொல்லை பயன்படுத்திவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.


ட்ரம்ப் குறித்து தவறான வார்த்தை பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்ட கனடா பிரதமர் கார்னி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்து பேசியபோது தாம் தவறான சொல்லை பயன்படுத்திவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த கார்னியிடம், ட்ரம்பை கடைசியாக எப்போது சந்தித்தீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு அவர், “பேச்சுவார்த்தைகள் நடந்தது, ஆனால் நான் பிஸியாகிவிட்டேன். மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போது பேசுவோம்,” என்று பதிலளித்தார்.

அதே கேள்வியை மீண்டும் வலுப்படுத்தியபோது, எதிர்பாராத விதமாக “இதைப் பற்றி யாருக்கென்ன கவலை?” என்ற பொருளில் “Who cares?” என கூறிவிட்டார் கார்னி. இதனை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

இதனையடுத்து கார்னி தனது தவறை ஏற்றுக்கொண்டு, “முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசும்போது நான் பயன்படுத்திய வார்த்தைகள் பொருத்தமானவை இல்லை. நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நான் தவறு செய்தால் அதை ஒப்புக்கொள்வேன் என்று கனேடியர்களுக்கு உறுதி அளித்தேன். அதன்படி, பயன்படுத்திய சொல் தவறு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் தொடர்பான தனது கருத்துக்கு அவர் அளித்த இந்த விளக்கம் தற்போது கனடா அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க