அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் காமேனி உயிரிழப்பு: ஈரானில் இனி என்ன நடக்கும்?

Published on: 01 Mar 2026, 11:28 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

காமேனியின் மறைவுக்கு பின், ஈரானில் 7 நாட்கள் பொது விடுமுறை மற்றும் 40 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஈரான் தூதரகங்களில் கொடி அரைக்கம்பத்தில் பறக்க வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் காமேனி உயிரிழப்பு: ஈரானில் இனி என்ன நடக்கும்?

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் திடீரென தாக்குதலை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடக நிறுவனம் IRNA தெரிவித்துள்ளது.

காமேனியின் மறைவுக்கு பின், ஈரானில் 7 நாட்கள் பொது விடுமுறை மற்றும் 40 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஈரான் தூதரகங்களில் கொடி அரைக்கம்பத்தில் பறக்க வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் காமேனியின் ஆதரவாளர்கள் கடும் கோபம் மற்றும் துக்கத்தை வெளிப்படுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

காமேனியின் மரணத்துக்குப் பிறகு, மகன் மொஜ்தபா புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்க வாய்ப்பு இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில், நாட்டை தற்காலிகமாக 3 பேர் கொண்ட குழு அ.தி. மசூத் பெஷ்கியான் தலைமையில் வழிநடத்தும் என்று கூறப்படுகிறது. பின்னர், 88 பேர் கொண்ட வல்லுநர் குழு கூடி புதிய உச்ச தலைவரை தேர்வு செய்யும் திட்டம் உள்ளது.

ஈரான் அரசாங்கம், இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியங்களில் அமெரிக்கா–இஸ்ரேல்–ஈரான் மோதல் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW