அனுபமா-துருவ் காதல் முறிந்ததா? ஹோட்டல் அறையில் நடந்தது என்ன?

Published on: 25 Jul 2026, 08:47 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
அனுபமா-துருவ் காதல் முறிந்ததா? ஹோட்டல் அறையில் நடந்தது என்ன?

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சில பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின் இன்ஸ்டாகிராமுக்கு திரும்பிய அவர், ஏராளமான புகைப்படங்களை ஒரே நேரத்தில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்களுடன் அவர் பகிர்ந்த கேப்ஷன்கள்தான் அவரின் காதல் வாழ்க்கையில் ஏதோ மாற்றம் நிகழ்ந்துள்ளதாக ரசிகர்கள் சந்தேகிக்க காரணமாக அமைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக அனுபமா பரமேஸ்வரனும், பிரபல நடிகர் சிதம்பரம் விக்ரமின் மகனும் திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகருமான துருவ் விக்ரமும் காதலித்து வருவதாக பலத்த வதந்திகள் பரவியிருந்தன.

'பைசன்' படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட நட்பு காலப்போக்கில் காதலாக மலர்ந்ததாகவும், இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக தோன்றியதும், சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் இதய எமோஜிகளுடன் ரீபோஸ்ட் செய்ததும், 'ஸ்பாட்டிஃபை' பிளேலிஸ்ட் ஒன்று வைரலானதும் இந்த வதந்திகளுக்கு பலமாக அமைந்திருந்தன. ஆனால் இரு தரப்பும் இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையோ, மறுப்பையோ தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகள் அனைத்து கவனத்தையும் ஈர்த்துள்ளன. "இத்தனை புகைப்படங்களை ஒரே நேரத்தில் பதிவிட்டதற்கு மன்னிக்கவும். ஒப்புதல்கள், பாடல்களைத் தேர்ந்தெடுப்பது அல்லது வேறொருவரின் குறிப்புகளுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை என்றால், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக மாறுகிறது" என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, "இனி அனுமதிகளுக்காக காத்திருப்பு இல்லை, பயம் இல்லை. என் வாழ்க்கை எனக்கு என்பதை நான் மறந்த நிலையில், மீண்டும் அதை உணர்ந்திருக்கிறேன்" என்றும், தான் நீண்ட நாட்களாக ஏதோ ஒன்றைச் சொல்ல காத்திருந்ததாகவும், ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த பதிவுகள் 'பிரேக்-அப்' ஒன்றை நிச்சயமாக குறிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும், அனுபமா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் துருவ் விக்ரமை 'அன்ஃபாலோ' செய்திருப்பதும், அவரது சகோதரரும் துருவை பின்தொடர்வதை நிறுத்தியிருப்பதும் வதந்திகளுக்கு புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளது.

பிரேக்கப்பிற்குப் பிறகு பெண்கள் ஹேர்கட் செய்வார்கள் என்ற நம்பிக்கையில், புதிய ஹேர்கட் செய்த தனது வீடியோக்களை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கிடையில், சென்னை ஹோட்டலில் வைத்து இந்த இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் அனுபமா துருவை செருப்பால் அறைந்துவிட்டு வெளியேறியதாகவும் சில தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்த தகவல்கள் எதுவும் சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து அனுபமாவோ அல்லது துருவ் விக்ரமோ இதுவரை பொதுவில் எந்த பதிலும் அளிக்கவில்லை.

அனுபமாவின் இந்த பதிவுகளை தொடர்ந்து, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். "பார்த்தால் பாவம் மாதிரி முகத்தை வைத்திருக்கும் அவர், இந்த அளவுக்கு டாக்சிக் என்பது தெரியாமல் போய்விட்டது. பிரேக்-அப் ஆனது நல்லது தான்" என்றும், "உங்களின் சந்தோஷம்தான் முக்கியம். இனியும் இது மாதிரி டாக்சிக் ஆளிடம் சிக்கிக்கொள்ளாதீர்கள். பிரேக்கப்பிறகு உங்கள் முகத்தில் இருக்கும் சந்தோஷமே பல விஷயம் சொல்கிறது" என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், "பிரேக்கப்பை நினைத்து கண்ணீர் விட வேண்டாம். சந்தோஷமாக இருங்கள். பிரபஞ்சம் உங்களுக்கு நல்லதையே கொடுக்கும்" என அனுபமாவிற்கு ஆதரவாகவும் பலர் பதிவிட்டுள்ளனர்.

தான் உண்மையாக காதலித்ததாகவும், அந்த காதல் தோல்வியில் முடிந்ததாகவும் அனுபமா 2021 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், துருவ் விக்ரமுடனான இந்த புதிய வதந்திகள் குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், இது தற்போதைய நிலைமை குறித்த அவரது அணுகுமுறையாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW