ஆடைத் தொழிற்சாலையில் இளம் பெண் கொலை – சந்தேக நபரை தேடும் பொலிஸார்

தென்னிலங்கையின் கஹதுடுவ பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த இளம் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலையில் இளம் பெண் கொலை – சந்தேக நபரை தேடும் பொலிஸார்

தென்னிலங்கையின் கஹதுடுவ பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த இளம் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கிம்ஹானி பெரேரா என்ற இளம் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த அவர், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக குறித்த ஆடைத் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் அதே தொழிற்சாலையில் உதவியாளராக பணிபுரிந்த பதுளை பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒருவராக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து இரத்தக் கறைகள் படிந்த கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் கடந்த ஒரு வருடமாக நெருங்கிய உறவு இருந்ததாக தெரியவந்துள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்தப் பெண் சந்தேக நபருடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று காலை பணிக்கு வந்த அந்தப் பெண் தனது கைப்பையை வைக்க ஒதுக்கப்பட்ட இடத்துக்குச் சென்றபோது அங்கு மறைந்து இருந்த சந்தேக நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் கழுத்தை அறுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்று, தங்கியிருந்த அறைக்குச் சென்று தனது உடைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். கடுமையாக காயமடைந்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்காக கஹதுடுவ பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர