யாழ்ப்பாணத்தில் பெண்கள் பெயரில் பண மோசடி: பிரபல விடுதிகள் எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், இந்த மோசடியாளர்களை நம்பி பலர் ஏமாந்த சம்பவங்களும் அம்பலமாகியுள்ளது.


யாழ்ப்பாணத்தில் பெண்கள் பெயரில் பண மோசடி: பிரபல விடுதிகள் எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், இந்த மோசடியாளர்களை நம்பி பலர் ஏமாந்த சம்பவங்களும் அம்பலமாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய தளங்கள் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளில் பெண்களுடன் உல்லாசமாக இருக்க முடியும் எனவும், அதற்கான 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையில் செலவாகும் எனவும் கூறி சில பெண்களின் புகைப்படங்களில் ,அவர்களின் முகங்கள் மறைக்கப்பட்ட புகைப் படங்களை விளம்பரமாக பிரசுரிக்கின்றனர்.

அவற்றை நம்பி தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை கேட்கும் போது, தனியார் விடுதியில் பெண் உள்ளதாக கூறி பணத்தை வைப்பில் விடுமாறு கூறி மோசடி நபர்கள் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.

இதனையடுத்து பணத்தினை வழங்கியவர்கள் அந்த விடுதிகளில் சென்ற பின்னரே தாம் ஏமாற்றப்பட்ட விடயம் அறிந்து அந்த தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்படுகிறது. இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்ய தயங்குவதால் , தொடர்ந்து குறித்த கும்பல் பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது .

அதேவேளை குறித்த கும்பல்கள் சமூக வலைத்தளங்களில் யாழில் உள்ள பிரபல தனியார் தங்குமிட விடுதிகளின் பெயர்களை பாவித்து மோசடிகளில் ஈடுபடுவதனால் , தங்குமிடங்களில் நற்பெயர்களுக்கு களங்கம் ஏற்படுவதாக அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே பொலிஸார் இவ்வாறான சமூக வலைத்தளங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி குறித்த கும்பல்களை சேர்ந்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க