"30 வயது வரை திருமணம் செய்யாதீங்க" – மகள்களுக்கு வனிதா கொடுத்த சர்ச்சைக்குரிய ஆலோசனை!

Published on: 07 Jan 2026, 06:27 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

"30 வயது வரை திருமணம் செய்ய வேண்டாம்" எனவும், "உங்களுடன் நிரந்தரமாக வாழப்போகிறார்கள் என்று உறுதியாக தெரிந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார். 

"30 வயது வரை திருமணம் செய்யாதீங்க" – மகள்களுக்கு வனிதா கொடுத்த சர்ச்சைக்குரிய ஆலோசனை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான வனிதா, தனது மகள்களுக்கு 30 வயது வரை திருமணம் செய்ய வேண்டாம் என அறிவுரை வழங்கியது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜயகுமார் – மஞ்சுளா தம்பதிக்கு பிறந்த மகளான வனிதா, தனது வாழ்க்கையில் பல திருமணங்களை சந்தித்து, தற்போது தனியாக தன் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாய்மை உணர்வுடன் கலந்து கொண்டு, மக்களின் மத்தியில் நல்ல பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தார். தற்போது அவரது இரண்டாவது மகள் வளர்ந்து பெரிய பெண்ணாக மாறியுள்ளார். அவரது மகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரும் வனிதா, சமீபத்தில் ஒரு பேட்டியில் மகள்களின் திருமணம் குறித்து தனது கருத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, தனது மகள்களிடம் "30 வயது வரை திருமணம் செய்ய வேண்டாம்" எனவும், "உங்களுடன் நிரந்தரமாக வாழப்போகிறார்கள் என்று உறுதியாக தெரிந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ளுங்கள்; அல்லது முதலில் லிவிங் டுகெதர் முயற்சித்துப் பாருங்கள்" என்று கூறியுள்ளார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW