லண்டனில் இலங்கை தமிழ் இளைஞன் படுகொலை – சந்தேக நபர் கைது
பிரித்தானியாவின் லண்டன் நகரில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் லண்டன் நகரில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவகம் ஒன்றில் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இந்த கொலை நிகழ்ந்ததாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜெயந்தன் இராமச்சந்திரன் (32) என்ற இந்த இளைஞன், கடந்த நவம்பர் 29ஆம் திகதி நடந்த தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 3ஆம் திகதி உயிரிழந்தார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக 25 வயதான Dequarn Williams என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் சம்பவத்திற்கு சில மணி நேரங்களிலேயே அவரை கைது செய்தனர்.
இராமச்சந்திரன், இலங்கையின் யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு மணம் புரிந்திருந்த இவரது மரணம், குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினரிடையே பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Editorial Staff