யாழ் நகரில் தனியார் காணியில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் – பரபரப்பு!

Published on: 09 Feb 2026, 03:00 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

யாழ்ப்பாணம் நகர பகுதியில் உள்ள தனியார் காணியில் இருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் நகரில் தனியார் காணியில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் – பரபரப்பு!

யாழ்ப்பாணம் நகர பகுதியில் உள்ள தனியார் காணியில் இருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையின் பின்புறம் அமைந்துள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள வெற்றுக்காணியை நேற்று சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன. அந்த நேரத்தில் துப்பரவு பணியாளர்கள் சந்தேகத்திற்கு இடமான ஒரு பொதியை கவனித்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் உடனடியாக யாழ்ப்பாண போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொதியை பரிசோதனை செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அந்த பொதிக்குள் கையெறி குண்டு மற்றும் கலிபர் வகை துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW