7 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நட்சத்திரத்தில் சனி: ஜனவரி இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

Published on: 09 Jan 2026, 06:39 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

2026 ஜனவரி 20ஆம் தேதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவானே என்பதால், இது அவரது “சொந்த நட்சத்திரம்” எனப் போற்றப்படுகிறது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நட்சத்திரத்தில் சனி: ஜனவரி இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

2ஜோதிடத்தின் படி, நவகிரங்களில் “நீதிமான்” எனப் போற்றப்படுபவர் சனி பகவான். ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்கும் சனி, மனித வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறார். தற்போது சனி மீன ராசியில் உள்ளார் மற்றும் 2027 வரை அங்கேயே தொடர்ந்து இருப்பார்.

இந்த நிலையில், 2026 ஜனவரி 20ஆம் தேதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவானே என்பதால், இது அவரது “சொந்த நட்சத்திரம்” எனப் போற்றப்படுகிறது. இத்தகைய நிகழ்வு சுமார் 27 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்வதால், இது மிகவும் சிறப்பான ஜோதிட நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இந்த நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இது மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும், நிதி மற்றும் தொழில் வளர்ச்சியையும் கொண்டுவரும் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

மகர ராசி: சனி பகவானின் சொந்த நட்சத்திர பிரவேசம் மகர ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை வலுப்பெறும். துணிச்சலான முடிவுகள் எடுத்து, அவை அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும், உடன் பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் முழுவதும் சாதகமாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தேடி வரும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெறுவார்கள். வெளிநாட்டில் படிக்கும் கனவு நனவாகும்.

மிதுன ராசி: ஜனவரி இறுதியில் மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரம்பரை சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து, அவை கைக்கு வந்து சேரும். தந்தையுடனான உறவு மேலும் வலுவடையும். வணிகர்கள் எதிர்பாராத லாபங்களைப் பெறுவார்கள்.

(இந்தத் தகவல் இணையத்தில் கிடைக்கும் பொது ஜோதிட மூலங்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் துல்லியத்திற்கோ அல்லது நம்பகத்தன்மைக்கோ உத்தரவாதம் இல்லை. இது பொது தகவலாக மட்டுமே கருதப்பட வேண்டும். எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், தகுதிவாய்ந்த ஜோதிட நிபுணரை அணுகுவது நல்லது.)

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW