“உள்ளம் அழகாக இருந்தால் மேனியும் அழகாகும்” – அழகின் ரகசியத்தை பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இயற்கையான அழகு குறித்து பேசியுள்ளார். வெளிப்புற அழகு மட்டுமல்ல, மனதின் தூய்மையும் ஒருவரின் உண்மையான அழகை வெளிப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.


“உள்ளம் அழகாக இருந்தால் மேனியும் அழகாகும்” – அழகின் ரகசியத்தை பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் Rashmika Mandanna, தனது அழகு மற்றும் வாழ்க்கை குறித்த பார்வையை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம், அவரது முகப் பொலிவு மற்றும் அழகின் ரகசியம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், வெளிப்புற அழகு மட்டுமே ஒருவரை அழகாக காட்டாது என்றும், மனதின் தூய்மையே உண்மையான அழகை வெளிப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

ராஷ்மிகா கூறுகையில், அழகு சாதனப் பொருட்கள் ஒருவரின் தோற்றத்தை மாற்ற உதவலாம். ஆனால் ஒருவரின் ஆழ்மனம் தூய்மையாகவும் நல்ல எண்ணங்களுடனும் இருந்தால் மட்டுமே அந்த அழகு முழுமையாக வெளிப்படும் என்று குறிப்பிட்டார்.

“உள்ளம் அழகானால் மேனியும் அழகாகும்” என்ற அவரது கருத்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

வாழ்க்கையில் முடிந்தவரை நல்ல விஷயங்களை செய்து வாழ வேண்டும் என்று தெரிவித்த ராஷ்மிகா, ஒருவர் செய்யும் நல்ல செயல்கள்தான் அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகும் நினைவில் நிற்கும் என்று கூறினார்.

திரைப்படங்களில் நடிப்பதுடன் மட்டுமின்றி, வாழ்க்கை மதிப்புகள் குறித்தும் தொடர்ந்து கருத்துகளை பகிர்ந்து வரும் ராஷ்மிகாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க