அமெரிக்காவின் புதிய சமாதான திட்டத்துக்கு பச்சை கொடி காட்டிய புடின்

உக்ரைன்-ரஷ்யா மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா சமீபத்தில் முன்வைத்துள்ள 28 அம்சங்கள் கொண்ட புதிய சமாதான திட்டம், பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையக்கூடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனும் ரஷ்யாவும் தற்போது இந்த அம்சங்களை தனித்தனியாக ஆய்வு செய்து வருகின்ற நிலையில், உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட சமீபத்திய வீடியோ உரை உலக கவனத்தை ஈர்த்துள்ளது. வரவிருக்கும் வாரம் உக்ரைனுக்கு மிகக் கடினமான ஒன்று ஆகலாம் என்றும், ஒரு முக்கிய கூட்டாளியை இழக்கும் அபாயம் அல்லது தேசிய மரியாதையில் தளர்வு ஏற்படும் சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள 28 அம்ச திட்டம் உக்ரைனுடன் நீடித்து வரும் மோதலுக்கு ஒரு நிலையான தீர்வை வழங்கக்கூடும் என்று புடின் இன்று நடைபெற்ற ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் திட்டத்தை ரஷ்யா பெற்றுள்ளதாக அவர் உறுதிப்படுத்தியிருந்தாலும், இதுகுறித்து இரண்டு நாடுகளுக்கும் இடையே இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என புடின் குறிப்பிட்டார். சமாதான பேச்சுவார்த்தைக்கான ரஷ்யாவின் தயார்நிலையை அவர் கவுன்சில் மன்றத்தில் மீண்டும் தெரிவித்தார்.