பாடசாலை மாணவர்களுக்குப் போக்குவரத்து வசதி வழங்குவது கட்டாயம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய

பாடசாலை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாடசாலைகள் இணைக்கப்படும்போது மாணவர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குவது கட்டாயம் எனவும், கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூல வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


பாடசாலை மாணவர்களுக்குப் போக்குவரத்து வசதி வழங்குவது கட்டாயம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய

பாடசாலை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாடசாலைகள் ஒன்றிணைக்கப்படும்போது, மாணவர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (23) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்டக் கல்வி உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் நிலவும் தமிழ் மொழிமூல பாடசாலைகளின் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் பாடசாலை வருகை குறைவடைவதுடன், இடைவிலகல் வீதமும் அதிகரித்து வருவதாக இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனைக் கருத்திற்கொண்டு, தேவையான பகுதிகளில் புதிய தமிழ் மொழிமூல வகுப்புகளை ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் மும்மொழிப் பாடசாலையொன்றை அமைப்பது தொடர்பிலும் இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, பாடசாலை மாணவர்களின் வரவை அதிகரிப்பதற்கான போசாக்குத் திட்டங்கள், பாடசாலைகளின் பாதுகாப்பு, பிறப்புச் சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்கான ஆவணங்களைப் பெற்றுக்கொடுத்தல், அதிபர் இடமாற்றங்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் உள்ளிட்ட பல முக்கிய கல்வி சார்ந்த விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க