அனுபவமற்றவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது: சாகர காரியவசம் குற்றச்சாட்டு

நாட்டை நிர்வகிக்கும் அனுபவமற்றவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரித்து, நீதித்துறையின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.


அனுபவமற்றவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது: சாகர காரியவசம் குற்றச்சாட்டு

நாட்டை நிர்வகிக்கும் அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரித்து, நீதித்துறையின் சுதந்திரமும் சட்டத்தின் ஆட்சியும் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தபோதிலும், நாட்டை நிர்வகிக்கத் தெரியாதவர்களே தற்போது பதவிகளில் இருப்பதாக அவர் சாடியுள்ளார்.

பல ஆண்டுகளாகச் சேர்க்க முடியாத பணத்தை இப்போது அவசரமாகச் சேகரிக்கும் முயற்சிகளே முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு காரணமாகச் சாதாரண மக்கள் தமது குடும்பங்களைக் காப்பாற்ற முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவளித்த தொழிற்சங்கங்களே இப்போது எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தயாராகி வருவதாகவும், அவர்களின் போராட்டங்களுக்குத் தமது கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஜனநாயகத்தைச் சிதைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றை அரசாங்கம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் நான்கு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஏழு மற்றும் மேல் நீதிமன்றத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நீதிபதி வெற்றிடங்கள் நிலவுகின்ற போதிலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கு முடிவடைந்து பல மாதங்களாகியும் அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிபதிகளின் பதவி உயர்வுகளைத் தடுத்து, தமக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியாகவே இது அமைந்துள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பாராளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட 18 பில்லியனுக்கும் அதிகமான நிலக்கரி நட்டம், 323 கொள்கலன்கள் விடுவிப்பு, கடவுச்சீட்டு விவகாரம், அமைச்சர்களின் சொத்துக்கள் மற்றும் நகர முதல்வர்கள் மீதான இலஞ்சப் புகார்கள் குறித்து இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க