பொலிஸ் உத்தியோகத்தர் என நடித்து ஆசிரியையிடம் 34 இலட்சம் ரூபாய் மோசடி செய்த முச்சக்கர வண்டிச் சாரதி கைது

நுவரெலியா டயகம பகுதியைச் சேர்ந்த ஆசிரியையிடம் போலி பொலிஸ் உப பரிசோதகர் என நடித்து திருமண வாக்குறுதி அளித்து 34 இலட்சம் ரூபா மோசடி செய்த முச்சக்கர வண்டிச் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பொலிஸ் உத்தியோகத்தர் என நடித்து ஆசிரியையிடம் 34 இலட்சம் ரூபாய் மோசடி செய்த முச்சக்கர வண்டிச் சாரதி கைது

நுவரெலியா, டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரிடம் போலி பொலிஸ் உப பரிசோதகர் (SI) என நடித்து 34 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த 36 வயதுடைய முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாடசாலை நிகழ்வொன்றில் குறித்த ஆசிரியைக்கு அறிமுகமான சந்தேகநபர், அவரைக் காதலிப்பதாக நடித்து அவரது பெற்றோரைச் சந்தித்துத் திருமண வாக்குறுதியும் அளித்துள்ளார்.

பின்னர், தனக்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சகராகப் (ASP) பதவி உயர்வு கிடைத்துள்ளதாகவும், நோர்வே நாட்டில் பயிற்சிக்குச் செல்வதற்குப் பணம் தேவைப்படுவதாகவும் கூறி, ஆசிரியையிடமிருந்து பல கட்டங்களாக 34 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியை, ஏப்ரல் 03 ஆம் திகதி நுவரெலியா விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளார். அதற்கமைய, தொலைபேசி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தந்தையாவார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர் குருநாகல் பிரதேசத்தில் 10,000 ரூபாவுக்குப் போலிப் பொலிஸ் சீருடையொன்றைக் கொள்வனவு செய்து, அதனை அணிந்துகொண்டு உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் புகைப்படங்களை எடுத்து அவற்றைக் காண்பித்துப் பலரை ஏமாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் மேலும் பலரிடம் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க