தாயின் கள்ளக்காதலனால் 14 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை – தாயும் காதலனும் கைது

Published on: 28 May 2026, 04:58 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

நெல்லையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 14 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தாயும் அவரது காதலன் மணிகண்டனும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தாயின் கள்ளக்காதலனால் 14 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை – தாயும் காதலனும் கைது

நெல்லை பாளையங்கோட்டையில் அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்றில், திருமணமான பெண்ணுடன் கள்ள உறவில் ஈடுபட்டு வந்த இளைஞர், அப்பெண்ணின் 14 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (24) என்பவர் டிரைவராகப் பணிபுரிந்து வரும் நிலையில், 42 வயதான திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 9-ம் வகுப்பு படிக்கும் அப்பெண்ணின் மகள் கண் முன்னேயே இருவரும் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, அடங்காத ஆசைக்கு அடிமையான மணிகண்டன், அந்த 14 வயது சிறுமியிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி தொந்தரவு செய்ததுடன், அவருக்குப் பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.

தாயின் கண் முன்னே இவை நடந்தும், அவர் தட்டிக்கேட்கவோ தடுக்கவோ இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி, பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனடியாக விரைந்த போலீசார் மாணவியை மீட்டு விசாரணை நடத்தியதில், அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, மாணவியின் தாய் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW