திரையரங்கு ஒன்றில் பாரிய ஆயுதக் களஞ்சியம் மீட்பு: சந்தேகநபர் ஒருவர் கைது

கிரிந்திவெல பகுதியிலுள்ள திரையரங்கு ஒன்றிலிருந்து பெருந்தொகையான துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகளுடன் 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.


திரையரங்கு ஒன்றில் பாரிய ஆயுதக் களஞ்சியம் மீட்பு: சந்தேகநபர் ஒருவர் கைது

கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹங்வெல்ல வீதிப் பகுதியிலுள்ள திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று மாலை குறித்த திரையரங்கில் விசேட சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்தச் சோதனையின் போதே ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன், மில்லத்தே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த திரையரங்க வளாகத்திலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவோல்வர் ரக துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிப்பீட்டர் ரக துப்பாக்கி மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு 12 போர ரக துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், 12 போர ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 398 தோட்டாக்கள், 16 போர ரகத்திற்குரிய 278 தோட்டாக்கள், .32 ரக துப்பாக்கிகளுக்குரிய 49 மற்றும் 3,083 தோட்டாக்கள் அடங்கலாக பெருமளவிலான தோட்டாக்கள் மற்றும் 2 உயிருள்ள கைக்குண்டுகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க