தமிழ் திரைப்பட இசையின் தலைசிறந்த படைப்பாளரான இளையராஜா, பல மொழித் திரைப்படங்களுக்காக ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.