சீரற்ற வானிலை: நாட்டின் மேலும் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த மழை காரணமாக ஹட்டன், நுவரெலியா கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையகப் பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்க மத்திய மாகாணக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நேற்று காலை முதல் அப்பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்திற்கொண்டு, மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்திலுள்ள ஏனைய கல்வி வலயங்களைப் பொறுத்தவரை, நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப பாடசாலைகளை நடத்துவதா அல்லது விடுமுறை வழங்குவதா என்பது குறித்த இறுதி முடிவை அந்தந்த வலயக் கல்வி அதிகாரிகள் சுயமாகத் தீர்மானிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஹட்டன் கல்வி வலயத்தில் இன்று தினம் விடுமுறை வழங்கப்படுவதால் தவறவிடப்படும் கல்வி நடவடிக்கைகளை ஈடுசெய்யும் வகையில், பின்னர் ஒரு நாளில் பதில் பாடசாலை நடத்தப்படும் என்றும் மாகாணக் கல்விச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.