கடுவலை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு; வெளியான தகவல்

கடுவலை மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனைகள் இன்று முல்லேரியா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளன.


கடுவலை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு; வெளியான தகவல்

கடுவலை நகரிலுள்ள மின்சார உபகரண விற்பனை நிலையமொன்றில் நேற்று (19) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனைகள் இன்று (20) முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டடத்தில் நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இது குறித்துத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் கோட்டை தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ அணைக்கப்பட்டதன் பின்னர் கட்டடத்தின் மேல் மாடியைச் சோதனையிட்ட தீயணைப்புப் படையினர், அங்கிருந்த கட்டிலில் நால்வரின் சடலங்களையும் மீட்டுள்ளனர். நச்சுப் புகையைச் சுவாசித்தமையால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர்கள் தலாஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த சில நாட்களாகக் குறித்த கட்டடத்தின் மேல் மாடியிலுள்ள பின்புற அறையில் தங்கியிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த மேல் மாடியின் வெளியேறும் கதவு திறக்க முடியாத வகையில் முழுமையாகப் பூட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மின் கசிவு காரணமாகவே இந்தத் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்குச் சென்ற கடுவலை நீதவான் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், தடயவியல் பொலிஸார் (SOCO) மற்றும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரும் அங்கு ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர். தீ விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய கடுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க