கிளிநொச்சியில் 14 வயதுச் சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை; 19 வயது இளைஞன் கைது
கிளிநொச்சி – திருவையாறு பகுதியில் 14 வயதுடைய சிறுமிக்கு மதுபானம் கொடுத்துப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய இளைஞரை கிளிநொச்சிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சியில் 14 வயதுடைய சிறுமி ஒருவருக்கு மதுபானம் கொடுத்து, அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி – திருவையாறு பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர், கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு அருகில் நின்றுகொண்டிருந்தபோது, அவரை ஏமாற்றி அழைத்துச் சென்று இக்கொடூரச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 19 வயதுடைய சந்தேகநபர், கிளிநொச்சி நகரில் விசா அலுவலகம் ஒன்றை நடத்தி வருபவர் எனத் தெரியவந்துள்ளது.
சிறுமிக்கு மதுபானம் வழங்கிய பின்னர், அவரைப் பலவந்தமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த இளைஞரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி, மேலதிக சிகிச்சைகளுக்காகவும் மருத்துவப் பரிசோதனைகளுக்காகவும் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 14 வயதுடைய சிறுமி ஒருவர் இவ்வாறு கொடூரமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள கிளிநொச்சிப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.