மட்டக்களப்பில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை

Published on: 14 Sep 2025, 07:54 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிறுவனத்தின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை

மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிறுவனத்தின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 15 லட்சம் ரூபாய் செலுத்துமாறும் அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (12) தீர்ப்பளித்தார்.

மட்டக்களப்பில் இயங்கிவரும் நிதி நிறுவனம் ஒன்றில் உள்ள வெற்றிடத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை சம்பவ தினமான கடந்த 2019 செப்டம்பர் நான்காம் திகதி நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அப்போது, நிதி நிறுவனத்திற்கு சென்ற பெண்ணை குறித்த நிதி முகாமையாளர் அங்கிருந்து வீடு ஒன்றுக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து நிதி நிறுவன முகாமையாளர் கைது செய்யப்பட்டார். வழக்கு பதியப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) குறித்த வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்து கொண்ட போது முகாமையாளருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சிகள் மற்றும் தடைய பொருட்கள் மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW