சித்தப்பாவுடன் கள்ளக்காதல்... கணவனைக் கொன்ற மனைவி! – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

நேற்று, இந்திராணி கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்கு வந்து, தானே கணவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டு சரணடைந்தார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடுக்கிட வைக்கும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.


சித்தப்பாவுடன் கள்ளக்காதல்... கணவனைக் கொன்ற மனைவி! – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் நடந்த கொலை வழக்கு அப்பகுதி மட்டுமல்லாமல், முழுத் தமிழகமும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கணவனை சித்தப்பாவுடன் இணைந்து கொன்று, பின்னர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த மனைவி இந்திராணி, போலீசாரையே திடுக்கிட வைத்துள்ளார்.

27 வயதான ரித்தீஷ் (தேவா) என்பவர், மதுரையைச் சேர்ந்தவர். கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்த இவர், தனது மனைவி இந்திராணி (26), மற்றும் 3 வயது மகனுடன் கோவை மாவட்டம் தாமரைக்குளத்தில் வசித்து வந்தார். கடந்த ஜனவரி 26-ம் தேதி அவர் திடீரென காணாமல் போனார். அவரது தாயார் சுசீலா, கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்திராணி, கணவர் எங்கே போனார், என்ன நடந்தது என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்காததால் சந்தேகம் எழுந்தது.

நேற்று, இந்திராணி கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்கு வந்து, தானே கணவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டு சரணடைந்தார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடுக்கிட வைக்கும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

இந்திராணிக்கும், அவரது சித்தப்பாவும், கரூரைச் சேர்ந்த 41 வயதான வினோத்குமாருக்கும் இடையே நீண்ட காலமாக கள்ளக்காதல் இருந்து வந்தது என்பது தெரிய வந்தது. தேவா வீட்டில் இல்லாத நேரங்களில் வினோத்குமார் அடிக்கடி வந்து இந்திராணியுடன் தனிமையில் சந்தித்து உல்லாசம் செய்து வந்தார். இதை அறிந்த தேவா, இருவரையும் கண்டித்து வந்தார்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி, கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த இந்திராணி மற்றும் வினோத்குமார், ஜனவரி 28 இரவு நடுவீட்டில் தேவாவை கத்தியால் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி கொலை செய்தனர். பின்னர், கரூரிலிருந்து தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்து, தேவாவின் உடலை கரூர் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் வைத்து, அவர் தற்கொலை செய்துகொண்டது போல நாடகம் நடத்தினர்.

மறுநாள் காலை, ரயில்வே போலீசார் உடலைக் கண்டுபிடித்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அதே நேரத்தில், கிணத்துக்கடவு போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆம்புலன்ஸ் ஒன்று அப்பகுதிக்கு வந்து சென்றது தெரிய வந்தது. இந்த ஆய்வு தகவல்கள் தன்னை சுற்றி மூடப்போகிறது என உணர்ந்த இந்திராணி, போலீசாரிடம் சரணடைந்தார்.

கைது செய்யப்பட்ட இந்திராணியை, கொலை நடந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கே இந்திராணி, தான் கணவரை எப்படிக் கொன்றார் என்பதை நடித்து காண்பித்தார். தலைமறைவான வினோத்குமார் மற்றும் அவருடன் இணைந்து கொலையில் பங்கேற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க