ஆஸ்திரேலியாவின் வடக்கில் ஃபினா சூறாவளி: மின் துண்டிப்பு காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த ஃபினா (Fina) சூறாவளி தாக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த ஃபினா (Fina) சூறாவளி தாக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளி தாக்கிய நேரத்தில் மணிக்கு 205 கிலோமீட்டர் (127 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக மின்கம்பிகள் கடுமையாக சேதமடைந்து, சுமார் 19,000 பேர் மின்சார வசதியின்றி உள்ளதாக வடக்கு பிராந்திய முதலமைச்சர் லியா ஃபினோச்சியாரோ தெரிவித்துள்ளார்.
மின்சார இணைப்புகள் மீளமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டார்வினில் வசிக்கும் மக்கள் சேதமடைந்த மின்கம்பிகள் அருகில் செல்லாமல் பாதுகாப்புடன் இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சூறாவளி காரணமாக டார்வின் சர்வதேச விமான நிலையம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. தற்போது நிலையற்ற காலநிலை மெலிந்த நிலையில், இன்று முதல் விமான நிலையத்தின் வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Editorial Staff