கனடா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்த வாய்ப்பு! குடியுரிமை சட்டத்தில் மாற்றம்

Published on: 24 Nov 2025, 05:28 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

வெளிநாடுகளில் பிறந்த கனேடியர் குழந்தைகளுக்கும் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி குடும்பங்களுக்கும் முக்கியமான நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்த வாய்ப்பு! குடியுரிமை சட்டத்தில் மாற்றம்

கனடா தனது குடியுரிமைச் சட்டங்களை நவீனமயமாக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றம், வெளிநாடுகளில் பிறந்த கனேடியர் குழந்தைகளுக்கும் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி குடும்பங்களுக்கும் முக்கியமான நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவின் குடிவரவு அமைச்சர் லீனா மெட்லேஜ் டயப் தெரிவித்ததாவது, பல ஆண்டுகளாக குடியுரிமைச் சட்டங்களில் நிலவி வந்த சிக்கல்களை நீக்கி, வெளிநாட்டில் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு நியாயத்தை வழங்கும் நோக்கத்தோடு புதிய திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன.

முந்தைய சட்டங்களின் காரணமாக குடியுரிமையை இழந்தவர்களுக்கும், புதிய விதிமுறைகள் மூலம் மீண்டும் குடியுரிமை வழங்கப்படும். இது கனேடிய குடியுரிமையை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

2009 ஆம் ஆண்டு அறிமுகமான விதிகளின்படி, குறைந்தபட்சம் ஒரு பெற்றோர் கனடாவில் பிறந்திருந்தால்தான் அவர்களின் குழந்தைக்கு கனடா குடியுரிமை வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இந்த விதி ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தால் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கப்பட்டது. மத்திய அரசு இந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டதால், பல குடும்பங்கள் குடியுரிமையின்றி ‘விலக்கப்பட்டவர்கள்’ என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆனால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பில் C-3 திட்டம், பழைய கட்டுப்பாடுகளின் காரணமாக குடியுரிமை இழந்தவர்களுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

புதிய விதிப்படி, வெளிநாட்டில் பிறந்த ஒரு கனேடிய பெற்றோர், தனது குழந்தை பிறப்பதற்கு அல்லது தத்தெடுப்பதற்கு முன் குறைந்தது 1,095 நாட்கள் (சுமார் 3 ஆண்டுகள்) கனடாவில் வசித்திருந்தால், அந்தக் குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்படும்.

இந்த நடைமுறை அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் குடியுரிமை விதிகளுடன் இணங்கியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW