அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கான செப்டம்பர் மாதக் கொடுப்பனவு ஒக்டோபர் 01 ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் தகுதிபெற்ற முதியோருக்கான 2026 செப்டம்பர் மாதக் கொடுப்பனவு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பிலிடப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
70 வயதிற்கு மேற்பட்ட 695,818 முதியோருக்காக, இத்திட்டத்தின் இரண்டு கட்டங்களையும் உள்ளடக்கி மொத்தம் 3,479.07 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதற்கட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 616,755 பயனாளிகளுக்காக 3,083.755 மில்லியன் ரூபாயும், இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 79,063 பயனாளிகளுக்காக 395.315 மில்லியன் ரூபாயும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
தகுதிபெற்ற பயனாளிகள் எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக உரிய கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.