உள்ளாடை அணிந்து வா...உடலை பார்க்க வேண்டும்... ‘போட்டோஷூட்’ பெயரில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடந்த அதிர்ச்சி அனுபவம்

சினிமாவுக்கு முன் நடந்த அதிர்ச்சியான அனுபவத்தை பகிர்ந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். ‘போட்டோஷூட்’ என்ற பெயரில் நடந்த அத்துமீறல் குறித்து மனவேதனையுடன் நினைவுகூர்ந்தார்.
உள்ளாடை அணிந்து வா...உடலை பார்க்க வேண்டும்... ‘போட்டோஷூட்’ பெயரில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடந்த அதிர்ச்சி அனுபவம்


தென்னிந்திய திரை உலகில் தனித்துவமான நடிப்பால் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது சிறுவயதில் சந்தித்த ஒரு வேதனையான அனுபவத்தை சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். 

சினிமா உலகில் காலடி எடுக்கும்முன் நடந்த இந்த சம்பவம், இன்னும் மனதில் இருந்து நீங்காத நினைவாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஒரு ‘போட்டோஷூட்’ வாய்ப்பாக அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கு எதிர்பாராத முறையில் சிக்கலில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவத்தை விவரிக்கும் போது, தன்னுடன் சகோதரர் சென்றிருந்தபோதும், அவரை வெளியே அமரவைத்து தனியாக உள்ளே அழைத்துச் சென்றதாக கூறுகிறார். அங்கு இருந்தவர்கள் உள்ளாடை அணிந்து பார்க்கும்படி கூறியதுடன், உடலைப் பார்ப்பதற்கான பேச்சுக்களும் நடந்ததாக அவர் நினைவுகூர்ந்தார். 

அந்த நேரத்தில் வயது குறைவாக இருந்ததால் என்ன நடக்கிறது என்பது முழுமையாக புரியவில்லை என்றாலும், சூழ்நிலை சரியாக இல்லை என்ற உணர்வு தோன்றியதாக அவர் கூறினார்.

சில நிமிடங்கள் கூட அந்த இடத்தில் தங்கியிருந்தால், ஒருவேளை அவர்கள் கூறியதை ஏற்றுக் கொண்டிருப்பேன் என அவர் அதிர்ச்சியுடன் பகிர்ந்தார். உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதால், சகோதரரிடம் அனுமதி கேட்க வேண்டும் என சொல்லி அந்த அறையை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார். இப்படியான சம்பவங்கள் இன்னும் பல பெண்களுக்கு நடந்திருக்கலாம் என்ற கவலையும் அவர் வெளிப்படுத்தினார்.

இதனுடன், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட இன்னொரு அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். தாமதமாக வந்ததற்காக கண்டித்தது பிரச்சனையல்ல, ஆனால் மற்ற நடிகைகளுடன் ஒப்பிட்டு பொதுவில் பேசியது மனதிற்கு வருத்தமாக இருந்ததாக கூறினார். தொழில்முறை சூழலில் மரியாதை மிகவும் அவசியம் என்பதையும், பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு தேவை என்பதையும் இந்த அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றன.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர