திருமணம் எப்போது? த்ரிஷாவின் பதில் இதுதான்... ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
நடிகை த்ரிஷாவின் திருமணம் குறித்து கூறிய பழைய பேட்டி மீண்டும் வைரலாகியுள்ளது. திருமணம் கட்டாயம் இல்லை என அவர் கூறிய கருத்து தற்போது ரசிகர்கள் இடையே பேசுபொருளாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, தற்போது 43 வயதை கடந்திருந்தாலும், அவரது திருமணம் குறித்து ரசிகர்களிடையே தொடர்ந்து ஆர்வம் நிலவி வருகிறது.
சமீபத்தில் நடிகை குஷ்பு மகளின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட த்ரிஷாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ரசிகர்கள் “அடுத்தது உங்கள் திருமணம்தானே?” எனக் கேள்விகளை எழுப்பினர்.
இந்த சூழலில், திருமணம் குறித்து த்ரிஷா முன்பு அளித்திருந்த ஒரு பேட்டி மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் த்ரிஷா கூறியதாவது:
“திருமணம் மீது எனக்கு தனிப்பட்ட நம்பிக்கை இல்லை. அது நடந்தாலும் சரி, நடக்காவிட்டாலும் சரி. கட்டாயத்திற்காக திருமணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.”
மேலும் அவர் கூறியதாவது, டேட்டிங் என்பது வெறும் வெளியில் செல்வது அல்ல, ஒருவரை ஒருவர் ஆழமாகப் புரிந்துகொள்ளும் உறவாக இருக்க வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும் தெரிவித்திருந்தார்.
திருமணம் செய்தால் அதை முழுமையாக காப்பாற்ற வேண்டும் என்பதால், விவாகரத்துக்கும் தனக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
“திருமணத்திற்கு முன் 100 முறை யோசிப்பேன். யாருடைய மனதையும் காயப்படுத்த விரும்பவில்லை,” எனவும் அவர் கூறியுள்ளார்.
காதல் குறித்து பேசும்போது, “காதல் இல்லாமல் இணைந்து வாழ்வது எனக்கு ஏற்றதல்ல. முதலில் காதல், அதன் பிறகே திருமணம். என் வாழ்க்கை துணையை இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,” என த்ரிஷா தெரிவித்திருந்தார்.
த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்பு தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் வரை சென்ற உறவு முடிவடைந்ததும், நடிகர் ராணா டகுபாட்டியுடன் தொடர்பான காதல் வதந்திகளும் ஒரு காலத்தில் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன.