அமெரிக்காவில் வெடித்த எரிமலை ; 400 அடி உயரத்திற்கு வெளியேறிய நெருப்பு குழம்பு

Published on: 27 Nov 2025, 06:35 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள ஹவாய் எரிமலை தேசிய பூங்காவில் அமைந்துள்ள கிலாவியா எரிமலை நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் வெடித்தது.

அமெரிக்காவில் வெடித்த எரிமலை ; 400 அடி உயரத்திற்கு வெளியேறிய நெருப்பு குழம்பு

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள ஹவாய் எரிமலை தேசிய பூங்காவில் அமைந்துள்ள கிலாவியா எரிமலை நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் வெடித்தது.

எரிமலை வெடிப்பின் தாக்கத்தில், சுமார் 400 அடி உயரத்திற்கு நெருப்பு குழம்பு (lava fountain) மேல்நோக்கி பாய்ந்தது. எரிமலையின் செயல்பாடு குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

வரலாற்று தகவல்படி, கிலாவியா எரிமலை முன்பு வெடித்தபோது 20,000 அடி உயரம் வரை நெருப்பு குழம்பு எழுந்துள்ளது.

தற்போது, காற்றின் சுழற்சி காரணமாக வெளியேறும் சாம்பல் தென்மேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இதுவரை ஹவாய் விமான நிலையங்களின் விமான சேவைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW