துபாயில் பரபரப்பு: அமெரிக்கத் தூதரகம் அருகே விழுந்து நொறுங்கிய ட்ரோன் - பாதுகாப்பு தீவிரம்!

Published on: 04 Mar 2026, 09:34 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகாமையில் இன்று திடீரென ட்ரோன் (ஆளில்லா விமானம்) ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.

துபாயில் பரபரப்பு: அமெரிக்கத் தூதரகம் அருகே விழுந்து நொறுங்கிய ட்ரோன் - பாதுகாப்பு தீவிரம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகாமையில் இன்று திடீரென ட்ரோன் (ஆளில்லா விமானம்) ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூதரக வளாகத்திற்கு மிக அருகிலுள்ள பகுதியில் இருந்து கரும்புகை உயர்ந்து வந்ததை நேரில் பார்த்த சாட்சியங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆரம்பகட்ட விசாரணையில் ஒரு ஆளில்லா விமானம் அந்தப் பகுதியில் விழுந்ததே தீ விபத்திற்குக் காரணம் என துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்த அவசர மீட்புப் படையினர், தீயை விரைவாக அணைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் எவ்வித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் போர் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, இச்சம்பவத்திற்குப் பிறகு அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW