சரிவடைந்த மக்கள்தொகையை உயர்த்த ஆணுறை உள்ளிட்ட கருத்தடைப் பொருட்களுக்கு அதிக வரி

Published on: 05 Dec 2025, 11:36 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

உலகின் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா தற்போது முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.

சரிவடைந்த மக்கள்தொகையை உயர்த்த ஆணுறை  உள்ளிட்ட கருத்தடைப் பொருட்களுக்கு  அதிக வரி

உலகின் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா தற்போது முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிற நிலையில், சீனா மக்கள்தொகை குறைவு பிரச்சனைக்கு ஆளாகியுள்ளது.

1980ஆம் ஆண்டு சீனா “ஒரே குழந்தை” கொள்கையை அறிமுகப்படுத்தியதின் விளைவாக, பல குடும்பங்கள் ஆண் குழந்தையை விரும்பும் நிலை உருவானது. இதனால், இன்றைய நிலையில் ஆண்களுக்கு திருமணம் செய்து கொள்வதில் துணைவியரைப் பெறுவது கடினமான சூழல் உருவாகியுள்ளது.

சிறு குடும்பம் என்பதற்கு மக்கள் பழகியதுடன், வாழ்க்கைச் செலவு அதிகரித்தது, திருமண வயது உயர்வது, குழந்தை பெறும் வயதில் தாமதம், மற்றும் பெண்களிடையே குழந்தை பெறும் ஆர்வம் குறைவது போன்ற காரணங்கள் சீனாவின் மக்கள்தொகை குறைவுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.

இந்த நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக, 2016ஆம் ஆண்டு சீனா ஒரே குழந்தை கொள்கையை ரத்து செய்தது. கடந்த ஆண்டு, மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஊக்கத்திட்டங்களும், வரிச்சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. இருந்தாலும், குழந்தைப் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது.

இதனால், மக்கள்தொகை குறைவைத் தடுக்க புதிய நடவடிக்கையாக, கருத்தடைப் பொருட்கள் போன்ற சில உபயோகப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க சீன அரசு தீர்மானித்துள்ளது. இதே சமயம், குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகள் மற்றும் திருமணச் சேவைகளுக்கு மதிப்புக் கூட்டு வரி விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW