உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து வகுப்புக்களுக்கும் இன்று நள்ளிரவு முதல் தடை

பரீட்சைகள் நிறைவடையும் வரை குறித்த தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

Published on: 04 Nov 2025, 09:43 am
15

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து வகுப்புக்களுக்கும் இன்று நள்ளிரவு முதல் தடை

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் அனைத்திற்கும் இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது. 
 
அதன்படி, பரீட்சைகள் நிறைவடையும் வரை குறித்த தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.  நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில், 340,525 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW