'திருநங்கை' என கிண்டல் செய்தவர்களுக்கு குஷ்பு மகள் அனந்திதாவின் நெத்தியடி பதில்!

Published on: 19 Jun 2026, 02:40 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி அவர்களின் மகள் அனந்திதா சுந்தர், தனது உடல் எடை குறைப்பு குறித்த வதந்திகளுக்கும், 'திருநங்கை' என கிண்டல் செய்தவர்களுக்கும் பாட்காஸ்ட் ஒன்றில் தெளிவான பதிலளித்துள்ளார்.

'திருநங்கை' என கிண்டல் செய்தவர்களுக்கு குஷ்பு மகள் அனந்திதாவின் நெத்தியடி பதில்!

நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி ஆகியோரின் இளைய மகளான அனந்திதா சுந்தர், தற்போது 'டபுள் ஆக்குபென்சி' என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில், தனது உடல் எடை குறைப்பு குறித்து வதந்திகளை பரப்பியவர்களுக்கும், தன்னை 'திருநங்கை' என கிண்டல் செய்தவர்களுக்கும் அவர் பாட்காஸ்ட் ஒன்றில் நெத்தியடியான பதிலை வழங்கியுள்ளார். இந்த நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது.

அனந்திதா, 2018-2019ஆம் ஆண்டிலிருந்தே உடல் எடையைக் குறைக்கத் தொடங்கியதாகவும், இந்த மாற்றத்திற்கு 7 ஆண்டுகள் ஆனதாகவும் கூறினார். கொரோனா காலத்தில் யாரும் தனது உடல் மாற்றத்தை கவனிக்கவில்லை என்றும், அதன் பின்னரே தான் அறுவை சிகிச்சை அல்லது 'Ozempic' போன்ற மருந்துகள் மூலம் எடையை குறைத்ததாக பலர் ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.

"அந்த சிகிச்சைக்கு நீங்கள் பணம் செலுத்தினீர்களா? அதை நேரில் பார்த்தீர்களா?" என்று கேட்ட அவர், "Ozempic" என்ற மருந்தால் தான் ஒல்லியானதாக கூறுபவர்களைக் கேட்கும் போது சிரிப்பு வருவதாகக் கூறினார்.

15 வயதில் ஒரு குழந்தை இவ்வளவு வெறுப்பை சம்பாதித்திருக்க வேண்டியதில்லை என்றும், தனது பெற்றோர் பிரபலங்கள் என்பதால் தன்னை அசிங்கமாக சொல்ல யாருக்கு அனுமதி என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், தன்னை திருநங்கை என கிண்டல் செய்தவர்களுக்கு பதிலளித்த அவர், திருநங்கைகள் அழகானவர்கள் என்றும், அப்படி அழைப்பது தனக்கு அவமானமல்ல என்றும் கூறினார்.

தனக்கு பல அன்பான திருநங்கை நண்பர்கள் இருப்பதாகவும், அந்த வார்த்தையை அவமானமாக பயன்படுத்துபவர்களின் 'டிரான்ஸ்போபிய' (திருநங்கைகள் மீதான வெறுப்பு அல்லது பாரபட்சம்) எண்ணத்தையே அது காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW