காதலனின் தாக்குதலில் 24 வயது இளம்பெண் உயிரிழப்பு; அதிர்ச்சி சம்பவம்

Published on: 28 Jan 2026, 09:51 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

காதலர்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் தகராறு உயிரிழப்பாக முடிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. காதலன் மேற்கொண்ட தாக்குதலில் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காதலனின் தாக்குதலில் 24 வயது இளம்பெண் உயிரிழப்பு; அதிர்ச்சி சம்பவம்

காதலர்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் தகராறு உயிரிழப்பாக முடிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. காதலன் மேற்கொண்ட தாக்குதலில் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (27) பகல், அக்குலான – சயுரபுர தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குடாவஸ்கடுவ, வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த யுவதிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததன் விளைவாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW