பிரான்ஸில் இருந்து யாழ் வந்த இளைஞர் வெட்டிக் கொலை: சிசிடிவியில் பதிவான தப்பிச் செல்லும் காட்சிகள்
பிரான்ஸில் வசிக்கும் பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டு மீண்டும் பிரான்சு திரும்பத் தயாராக இருந்த பிரிந்தன், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த 29 வயது இளைஞர் ராஜகுலேந்திரன் பிரிந்தன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வடமராட்சி கரணவாய் கூடாவளவு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் வசிக்கும் பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டு மீண்டும் பிரான்சு திரும்பத் தயாராக இருந்த பிரிந்தன், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான நேரடி காரணம் இதுவரை தெரியவராப நிலையில், சம்பவ இடத்திலிருந்து இரண்டு சந்தேக நபர்கள் தப்பிச் செல்கிற காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நேற்றிரவு சுமார் 12 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்றை பெற்ற அவர், மோட்டார் சைக்கிளில் சென்றபோதே இந்த தாக்குதல் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னால் வந்த குற்றவாளிகள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி பிரிந்தனை கொலை செய்துள்ளனர்.
உடல் தற்போது ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்ய நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Editorial Staff