லண்டனில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் 4 மில்லியன் பவுண்ட்ஸ்  பணம் மீட்பு

லண்டனின் கேட்ஃபோர்ட் பகுதியில் வாகனமொன்றையும் அதனுடன் தொடர்புடைய குடியிருப்பையும் சோதனையிட்ட மெட்ரோபொலிட்டன் பொலிஸார், 4 மில்லியன் பவுண்ட்ஸ் ரொக்கப் பணத்தையும் ஒரு கிலோ கொக்கெய்ன் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.


லண்டனில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் 4 மில்லியன் பவுண்ட்ஸ்  பணம் மீட்பு

பிரித்தானியாவின் லண்டன் நகரில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது, 4 மில்லியன் பவுண்ட்ஸிற்கும் அதிகமான ரொக்கப் பணம் மற்றும் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

லண்டனின் கேட்ஃபோர்ட் (Catford) பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த வாகனமொன்றை வழிமறித்துச் சோதனையிட்ட பொலிஸார், அதிலிருந்து 35,000 பவுண்ட்ஸ் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் குறித்த வாகனத்தின் சாரதியான 54 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அவருடன் தொடர்புடைய குடியிருப்பொன்றையும் பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போது, குறித்த வீட்டின் இரண்டு படுக்கையறைகளில் பொலித்தீன் பைகளுக்குள் (Shopping bags) மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 மில்லியன் பவுண்ட்ஸ் ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த குடியிருப்பிலிருந்து ஒரு கிலோகிராம் கொக்கெய்ன் (Cocaine) போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதுவரை முன்னெடுத்த நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய ரொக்கப் பணத் தொகைகளில் இதுவும் ஒன்று என மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க