முடி கொட்டியதால் மனமுடைந்த 19 வயது இளம்பெண் தற்கொலை

Published on: 11 Aug 2026, 09:03 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அஞ்சலி, கடந்த ஒரு மாதமாக புழுவெட்டு நோயால் பாதிக்கப்பட்டு முடி முழுவதும் கொட்டியதால் மனமுடைந்து, வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முடி கொட்டியதால் மனமுடைந்த 19 வயது இளம்பெண் தற்கொலை

தேனி மாவட்டத்தில் முடி கொட்டியதால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகள் அஞ்சலி (வயது 19), கடந்த ஒரு மாதமாக புழுவெட்டு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோயின் தாக்கத்தால் அவரது தலையில் இருந்த முடிகள் அனைத்தும் கொட்டிப்போய்விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அஞ்சலி, நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் அழுகுரல்கள் வீட்டை சூழ்ந்தன.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் பெண்களின் மன அழுத்தம் குறித்து சமூகம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW