கணவனின் போனை தொட்ட மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி... பகீர் சம்பவம்!

Published on: 05 Aug 2026, 08:30 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

தெலுங்கானாவில் ஆதரவற்ற அனாதை என்று நம்பி ஒரு தம்பதி தங்கள் இளைய மகளை திருமணம் செய்து வைத்தனர். ஆனால் கணவரின் செல்போனில் பல பெண்களுடனான ஆபாச வீடியோக்களை கண்ட மனைவி, உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

கணவனின் போனை தொட்ட மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி... பகீர் சம்பவம்!

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள குண்ட்ரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த மன்னே மற்றும் சுஜாதா தம்பதியரின் வாழ்க்கையில் நடந்த சோகச் சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆதரவற்ற அனாதை என்று நம்பி தங்கள் இல்லத்தில் அடைக்கலம் கொடுத்த ஒருவருக்கு, தங்கள் சொந்த மகளையே திருமணம் செய்து வைத்த இந்த தம்பதி, இப்போது கொடூரமான நம்பிக்கைத் துரோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, மேடக் மாவட்ட மச்சல் பகுதியில் உள்ள கவுகூர் தர்காவிற்கு வழிபாட்டிற்காக சென்ற மன்னே-சுஜாதா தம்பதியினர், அங்கு ஒரு இளைஞரைச் சந்தித்தனர்.

தான் ஒரு ஆதரவற்ற அனாதை என்றும், இந்த உலகத்தில் தனக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை என்றும் பரிதாபமாக கதறிய அந்த நபரின் பேச்சில் இரக்கம் கொண்ட தம்பதியினர், அவருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தங்கள் கிராமத்திற்கே அழைத்து வந்து, தங்களுடனே தங்கவைத்துக் கொண்டனர்.

நாளடைவில், அந்த நபர் மன்னேவின் குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாக பழகத் தொடங்கினார். குறிப்பாக, மன்னேவின் இரண்டாவது மகளிடம் காதலை வளர்த்து வந்தார்.

அனாதையான தனக்கு இப்படியொரு அன்பான குடும்பம் கிடைத்தது தான் தனது அதிர்ஷ்டம் என்று அடிக்கடி கூறிய அந்த நபரை முழுமையாக நம்பிய பெற்றோர், தங்கள் மகளின் காதலையும் ஏற்றுக்கொண்டு, கடந்த மே மாதம் இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால், திருமணத்திற்குப் பிறகும் அந்த நபர் வேலை விஷயம் என்று காரணம் சொல்லி அடிக்கடி மியாபூர் பகுதிக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இது மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தனது கணவரை ரகசியமாகக் கண்காணித்து வந்த மனைவிக்கு எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.

ஆனால், ஒருநாள் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது செல்போனை எடுத்துப் பார்த்தபோதுதான் அவரின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்தது. அதில் பல்வேறு பெண்களுடன் தகாத முறையில் அவர் இருக்கும் ஆபாச வீடியோக்கள் நிறைந்து கிடந்தன.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி, கணவர் வீட்டுக்கு வந்ததுமே உடனடியாக அவரிடம் கேள்வி எழுப்பினார். தனது செல்போன் மனைவியிடம் சிக்கிவிடும் என்பதை எதிர்பாராத அந்த நபர், தனது தவறை மறைப்பதற்காக மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அத்துடன், அன்றைய இரவே கிராமத்தை விட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

சில நாட்கள் கழித்து அவர் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பியதும், மனைவி உடனடியாக கிராம மக்களிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் தெரிவித்தார். இதையடுத்து ஆத்திரமடைந்த ஊர் மக்கள் அந்த நபரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அப்போதுதான் அவரின் உண்மை பின்னணி வெளியானது.

அவர் உண்மையில் ஆதரவற்ற அனாதை இல்லை என்பதும், அவருக்கு சொந்த ஊரில் அம்மாவும், தம்பியும் இருக்கிறார்கள் என்பதும் வெளியானது. மேலும், அவர் தனது உண்மையான மதத்தை மறைத்து, போலியான மத அடையாளத்துடன் வாழ்ந்து வந்ததும், தன்னுடைய பெயர் ஹேமந்த் இல்லை, உண்மையான பெயர் நசார் என்றும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நசாரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களின் மனிதாபிமானமே இவ்வளவு பெரிய துரோகத்திற்கு வழிவகுத்துவிட்டதே என்று இப்போது இடிந்து போய் உட்கார்ந்திருக்கும் அந்தப் பெற்றோரின் நிலை பரிதாபத்திற்குரியதாக உள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW