சூரிய பெயர்ச்சி 2026: அதிர்ஷ்ட கதவு திறக்கும் இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் ராஜயோகம்!

Published on: 13 Sep 2026, 08:14 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

செப்டம்பர் 17 சூரிய பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு திடீர் திருப்பங்களும் தொழிலில் அபரிமிதமான லாபமும் கிடைக்கவுள்ளது. முழு விபரங்களை உடனே தெரிந்துகொள்ளுங்கள்.

சூரிய பெயர்ச்சி 2026: அதிர்ஷ்ட கதவு திறக்கும் இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் ராஜயோகம்!

நவகிரகங்களின் தலைவனாகவும் தலைமைத்துவம், தன்னம்பிக்கை மற்றும் அந்தஸ்தின் காரகனாகவும் விளங்கும் சூரிய பகவான் மாதம் ஒருமுறை தனது ராசி மண்டல இடத்தை மாற்றக்கூடியவர்.

அந்த வகையில் தனது சொந்த வீடான சிம்ம ராசியில் கேதுவுடன் இணைந்திருந்த சூரியன், எதிர்வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி புதனின் ஆதிக்கமுடைய கன்னி ராசிக்குள் பெயர்ச்சியாகவுள்ளார். இந்த பெயர்ச்சியின் மூலம் கேதுவின் பிடியிலிருந்து விடுபடும் சூரிய பகவான், குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி நிலைகளில் எதிர்பாராத அனுகூல திருப்பங்களையும் அபரிமிதமான முன்னேற்றங்களையும் அள்ளி வழங்கவுள்ளார்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு சூரிய பகவான் லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டிற்குள் பிரவேசிக்கிறார். வருமானம், அபரிமிதமான லாபம் மற்றும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் இடமாக இது அமைவதால், தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உச்சங்களை எட்டுவீர்கள். வர்த்தகத்தில் புதிய தொடர்புகளும் கூட்டணிகளும் நல்ல நிதி ஆதாரங்களை பெற்றுத்தரும்.

புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு இது பொற்காலமாக அமையவுள்ளதுடன், பணியிடத்தில் நீடித்த அழுத்தங்கள் நீங்கி வருமான உயர்வு மற்றும் பதவி வாய்ப்புகள் கிட்டும். நீண்ட காலமாக வேலை தேடி அலைந்தவர்களுக்கு சூரியனின் அருளால் கைநிறைய சம்பளத்துடன் புதிய வேலைவாய்ப்புகள் தேடிவரும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு கர்ம மற்றும் தொழில் ஸ்தானமான 10 ஆம் வீட்டிற்கு சூரியன் பெயர்ச்சியாகிறார். இதன் விளைவாக தொழில் மற்றும் உத்தியோக வாழ்க்கையில் மிகப்பெரிய நேர்மறை மாற்றங்கள் உருவாகும். பணியிடத்தில் நீண்ட நாட்களாக நீங்கள் ஆற்றிய கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரமும் பதவி உயர்வும் தேடிவரும் தருணம் இதுவாகும்.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கும் அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கும் மிகச் சிறந்த நற்செய்திகள் வந்து சேரும். உத்தியோக மாற்றம் செய்ய விரும்புபவர்கள் இக்காலகட்டத்தில் எடுக்கும் முயற்சிகள் யாவும் சாதகமான பலன்களை தரும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW