ஆகஸ்ட் 17 சூரியன்-கேது இணைப்பு: இந்த 3 ராசிகளுக்கு புதிய சக்தி, திருப்புமுனை!

ஜோதிடத்தின்படி சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் ஆகஸ்ட் 17-ஆம் திகதி பெயர்ச்சி அடைகிறார். சிம்மத்தில் ஏற்கனவே கேது இருப்பதால், சூரியன்-கேது இணைப்பு உருவாகிறது.


ஆகஸ்ட் 17 சூரியன்-கேது இணைப்பு: இந்த 3 ராசிகளுக்கு புதிய சக்தி, திருப்புமுனை!

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் பெயர்ச்சியின்போது, சில கிரகங்களுடன் சேர்க்கையும் நடைபெறும். இரண்டு கிரகங்கள் இணையும் போது, அந்த ஆற்றல் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 17-ஆம் திகதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி அடையவுள்ளார்.

ஜோதிடத்தின்படி, சூரியன் தனது சொந்த ராசியில் மிகவும் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். அப்போது அவரது செல்வாக்கு பன்மடங்கு அதிகரிக்கும். இப்போது சிம்ம ராசியில் ஏற்கனவே கேது பகவான் இருக்கிறார். எனவே, ஆகஸ்ட் 17-ஆம் திகதி கேது-சூரியன் இணைப்பு நடைபெற உள்ளது. இந்தக் கிரக இணைப்பு, குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றலை வழங்கும். அந்த சிறப்புப் பலன்களைப் பெறும் ராசிகள் யார் என்பதை இப்போது காண்போம்.

சிம்மம்: கேது-சூரியன் இணைப்பால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் உங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் எளிதாக நடக்கும். பணிகளில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளிநாட்டு தொடர்பான பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

வியாபாரம் தொடர்பான விஷயங்களில் பல முக்கியமான நுணுக்கங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். வெளி வட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் கணிசமாக உயரும். வியாபார இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் உருவாகலாம். ஆரோக்கியம் சார்ந்த நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி கிட்டும். தந்தை வழி உறவுகளால் எதிர்பார்த்த லாபமும், ஆதாயமும் கிடைக்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சூரியன்-கேது இணைப்பு நேர்மறையான ஆற்றலை வழங்கும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் உங்கள் மனதிற்கு மிகுந்த திருப்தியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு முன்னேற்றமான கல்வி வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் பல தெளிவுகள் உண்டாகும்.

எதையும் செய்து முடிக்க முடியும் என்ற அசைக்க முடியாத மனநிலை பிறக்கும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபங்கள் மேம்படும். திருமணம், இல்லநிகழ்வு போன்ற மங்கலமான செயல்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். எதிலும் சிக்கனமாகவும், விவேகமாகவும் செயல்படத் தொடங்குவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். வியாபாரப் பணிகளில் சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும், உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்பட்டால் வெற்றி கிட்டும்.

தனுசு: கேது-சூரியன் இணைப்பு தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும். பெரியோர்களின் ஆலோசனைகள் உங்கள் வாழ்க்கையில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி தருவீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்கள் புதிய அனுபவங்களையும், அறிவையும் அதிகரிக்கும். வழக்கு அல்லது சட்ட சம்பந்தமான விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும்.

வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரித்து, தொழில் லாபம் பெருகும். கல்வியில் ஏற்பட்டிருந்த ஆர்வமின்மை முற்றிலும் குறையும். நண்பர்களிடத்தில் இருந்த பழைய மனக்கசப்புகள் அனைத்தும் நீங்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படுவதுடன், நீண்ட நாளாக நிலவிய பிரச்சனைகளுக்கும் முற்றான முடிவுகள் ஏற்படும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்பட்டு, வியாபாரத்தில் வரவுகள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மேம்படும்; மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும்.

பரிகாரம்: இந்த காலகட்டத்தில் மேலும் நன்மைகளைப் பெறவும், கேதுவின் எதிர்மறை விளைவுகளைக் குறைக்கவும் தினமும் காலையில் சூரிய உதயத்தின்போது, சூரிய பகவானுக்கு தண்ணீர் மற்றும் அட்சதையைச் சமர்பித்து, "ஓம் சூர்யாய நமஹ" என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மேலும், கேதுவின் எதிர்மறை விளைவுகளைத் தணித்து நேர்மறை ஆற்றலை அதிகரிக்க, கருப்பு மற்றும் வெள்ளை எள் விதைகள் அல்லது போர்வைகளை நன்கொடையாக வழங்குவது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன; நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க