கனடா கற்பக விநாயகர் ஆலயத்தில் கொள்ளை: முகமூடியணிந்த நபர்கள் உண்டியலைப் பறித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம்
கனடாவின் பிரம்டன் நகரில் அமைந்துள்ள சிறி கற்பக விநாயகர் ஆலயத்தில் முகமூடியணிந்த சில நபர்கள் உண்டியலைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் பிரம்டன் நகரில் அமைந்துள்ள சிறி கற்பக விநாயகர் ஆலயத்தில் முகமூடியணிந்த சில நபர்கள் உண்டியலைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வேகமாக பரவி வருகின்றன.
சம்பவம் நடைபெற்ற போது ஆலயத்தில் வழக்கமான பூஜை மற்றும் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் உட்புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை எடுத்துச் செல்லும் காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளன. பக்தர்களும் ஆலய மதகுருமாரும் எதிர்பாராத இந்த நிகழ்வால் அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்ததாக வீடியோவில் தெளிவாகக் காணப்படுகிறது.
சம்பவம் குறித்து உள்ளூர் சமூகத்தினர் கவலை வெளியிடுவதுடன், கொள்ளையர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Editorial Staff