வெள்ளை மாளிகையில் பெட்டினா ஆண்டர்சனுடன் டிரம்ப் ஜூனியருக்கு நிச்சயதார்த்தம்

Published on: 17 Dec 2025, 04:08 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

டிரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் உள்ள டிரம்ப் ஜூனியர், தொழிலதிபராகவும், தொலைக்காட்சி பிரபலமாகவும் அறியப்படுகிறார்.

வெள்ளை மாளிகையில் பெட்டினா ஆண்டர்சனுடன் டிரம்ப் ஜூனியருக்கு நிச்சயதார்த்தம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மூத்த மகனான டொனால்ட் ஜான் டிரம்ப் ஜூனியர், பெட்டினா ஆண்டர்சன் என்பவருடன் வெள்ளை மாளிகையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகி, பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

டிரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் உள்ள டிரம்ப் ஜூனியர், தொழிலதிபராகவும், தொலைக்காட்சி பிரபலமாகவும் அறியப்படுகிறார். அவர் 2005-ஆம் ஆண்டு மாடல் வனேஸ்ஸாவைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். 12 ஆண்டுகள் நீடித்த இந்த திருமணம் 2018-இல் மனம் ஒத்து விவாகரத்து செய்யப்பட்டது.

விவாகரத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு முதல் பெட்டினா ஆண்டர்சனுடன் உறவை மேம்படுத்திய டிரம்ப் ஜூனியர், இப்போது அவருடன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்க உள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த நிச்சயதார்த்த விழாவில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டு, இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW