4 நாட்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 5,287 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.


4 நாட்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

இலங்கைக்கு கடந்த நான்கு நாட்களில் கணிசமான அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் மொத்தம் 40,054 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 5,287 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பிரிட்டனில் இருந்து 5,184 பேரும், ரஷ்யாவில் இருந்து 3,817 பேரும் சுற்றுலா பயணமாக இலங்கை வந்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 23,62,521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்தனர். இந்த வளர்ச்சி தொடரும் நிலையில், இவ்வருடம் 3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க